உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனரா வங்கியில் பாஸ் புக் பதிவு செய்யும் தானியங்கி இயந்திரம் பழுதால் அவதி

கனரா வங்கியில் பாஸ் புக் பதிவு செய்யும் தானியங்கி இயந்திரம் பழுதால் அவதி

ஈரோடு; ஈரோடு கனரா வங்கியின் பிரதான கிளை, பழைய பூந்துறை சாலையில் செயல்படுகிறது. இங்கு நுாற்றுக்கணக்கானோர் கணக்கு வைத்-துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பாஸ் புத்த-கத்தில் கணக்கு வழக்குகளை பதிவு செய்ய வச-தியாக, தானியங்கி இயந்திரம் உள்ளது. ஆனால் மூன்று மாதமாக இயந்திரம் பழுதாகியுள்ளது. வங்கி நிர்வாகம் பழுதை நீக்க முயற்சி செய்யா-ததால், வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:கடந்த மூன்று மாதங்களாக பாஸ் புத்தகத்தில் என்ட்ரி போட முடியவில்லை. இதனால் வங்கி வரவு செலவுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை. இதுகுறித்து வங்கி அதி-காரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. மாவட்-டத்தின் முன்னோடி வங்கியாக வங்கி திகழும் சூழலில், பழுதை சரி செய்யாமல் காலம் தாழ்த்-துவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி