உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்பத்தில் மோதிகவிழ்ந்த கார்

கம்பத்தில் மோதிகவிழ்ந்த கார்

காங்கேயம்:காங்கேயத்தை அடுத்த கொடுவாய், எல்லப்பாளையம்புதுாரை சேர்ந்தவர் கார்த்திக், 36; இவரின் உறவினர் உதயசங்கர், 15; இருவரும் நேற்று மதியம் கொடுவாயிலிருந்து காங்கேயத்துக்கு பொலிரோ காரில் சென்றனர். காரை கார்த்தி ஓட்டினார். காங்கேயம் அருகே அகஸ்தியலிங்கம்பாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின் கம்பத்தில் மோதி தலைகீழாக உருண்டு புரண்டது. இதில் மின் கம்பம் உடைந்தது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். மின்சாரமும் உடனடியாக தடைபட்டதால், இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை