உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாதாள சாக்கடை குழியில் சிக்கிய பெண் ஓட்டிய கார்

பாதாள சாக்கடை குழியில் சிக்கிய பெண் ஓட்டிய கார்

ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணசாமி வீதியில், சில நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டினர். பணி முடிந்து வழக்கம்போல் முறையாக சீரமைக்காமல் மண்ணை கொட்டி சென்றனர். நேற்று காலை அவ்வழியாக ஒரு பெண் ஓட்டி வந்த கார், பாதாள சாக்கடைக்காக தோண்டி மூடப்பட்ட குழியில் சிக்கியது. காரை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் திணறினார். அப்பகுதி மக்கள் உதவியுடன் சிறிது நேரத்துக்குப் பிறகு காரை மீட்டு ஓட்டி சென்றார்.பாதாள சாக்கடைக்கு பந்தாடப்பட்ட மாநகராட்சி வார்டுகளில், இதுபோன்ற இடியாப்ப சிக்கல் அவ்வப்போது நடக்கிறது. பணி நிறைவு பெற்ற பிறகு எந்த அதிகாரியும், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்வதே கிடையாது. அவ்வாறு செய்தால் இதுபோன்ற நிலை தவிர்க்கப்படும் என்பதும் மக்களின் குமுறலாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி