உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம்:ஆசனுாரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு சுவிப்ட் கார் நேற்று மதியம் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் 6, -7வது கொண்டை ஊசி வளைவு இடையே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுற தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. காரில் பயணித்த ரபீக், 29, சவுகத் அலி, 31, ரபீக், 36, அசேன், 26, முஸ்தாக், 30, ஐந்து பேரும் லேசான காயமடைந்தனர். ஐவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது தொடர்பாக ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி