மேலும் செய்திகள்
நா.த.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
20-Jan-2025
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில், ப.செ.பார்க் பகுதியில், நாம் தமிழர் கட்சியினர்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே கடந்த, 2ல் நோட்டீஸ் வினியோகம் தொடர்பாக பிரச்னை எழுந்தது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இந்நிலையில் த.பெ.தி.க.,வை சேர்ந்த மூவர், நா.த.க.வினர் தங்களை தாக்கியதாக, ஈரோடு அரசு மருத்துவம-னையில் உள் நோயாளியாக சேர்ந்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதன்படி நா.த.க.,வை சேர்ந்த நான்கு பேர் மீது, ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த புகாரின்படி, அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத ஐந்து பேர் மீதும், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
20-Jan-2025