அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
காங்கேயம், அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் இரவு காங்கேயம் நகர பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக காங்கேயம் நகர பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் அனுமதி இல்லாமலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் இருந்ததாக, 3வது வார்டு கவுன்சிலர் சுரேஸ், தகவல் தொழிர்நுட்ப நிர்வாகி விக்னேஸ்குமார், 15 வார்டு செயலாளர் பிரபாகரன், இளைஞரணி வினோத் என நான்கு பேர் மீது, காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.