தியேட்டர் மேலாளர் மீது இரு பிரிவுகளில் வழக்கு
ஈரோடு, டிச. 12-சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய தியேட்டர் மேலாளர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கெம்மநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பெரியசாமி மகன் ஸ்ரீதர், 24. கோபி அருகே, கொளப்பலுாரில் உள்ள சினிமா தியேட்டரில் மேலாளராக உள்ளார். இவர் கோபியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். சிறுமி தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்ட பிரிவுகளின் கீழ், ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.