உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது போதையில் போலீசாரை சாடிய இருவர் மீது வழக்கு

மது போதையில் போலீசாரை சாடிய இருவர் மீது வழக்கு

அந்தியூர்: மது போதையில், போலீசாரை தரக்குறைவாக பேசிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆப்பக்கூடல் போலீசார், நேற்று முன்தினம் இரவு அத்தாணி, கைகாட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்டம், சீதாராம்பாளையத்தை சேர்ந்த, குப்புசாமி, 42, குமார், 33, என தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும், மது போதையில் இருந்ததும், அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை