உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ பிரிவில் இரு வாலிபர்கள் மீது வழக்கு

போக்சோ பிரிவில் இரு வாலிபர்கள் மீது வழக்கு

ஈரோடு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமி, சமூக வலைதளத்தில் சென்னையை சேர்ந்த வாலிபருடன் பேசி வந்தார். இதன் மூலம் சிறுமியின் மொபைல் எண்ணை பெற்று, இருவரும் வீடியோ காலில் தனிமையில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், வீடியோ காலில் பேசியபோது எடுத்த ஆபாச வீடியோ, போட்டோக்களை சிறுமிக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி அளித்த புகார்படி, சென்னையை சேர்ந்த ஆதி, 24, என்பவர் மீது நேற்று முன்தினம் போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* பங்களாபுதூர் டி.என்.பாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் ராம், 23, தொழிலாளி. கோபியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர், மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தனர். இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்திய, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், புகார்படி ராம் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ