சிறந்த சாகுபடி தொழில் நுட்பத்துக்கு ரொக்கப்பரிசு
ஈரோடு :வேளாண் துறை சார்பில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு, நவீன வேளாண் கருவி, சாகுபடி தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கு முதல் பரிசாக, 2.5 லட்சம் ரொக்கம், இரண்டாம் பரிசு, 1.5 லட்சம் ரொக்கம், மூன்றாம் பரிசாக, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.பங்கு பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணம், 150 ரூபாய். வேறு கண்டுபிடிப்பு, போட்டிகளில் பரிசு வென்றவர்கள் பங்கேற்க இயலாது. கண்டுபிடிப்பானது வேளாண் செலவை குறைப்பதாக, விலை குறைவானதாக, அதிக விளைச்சலை தரக்கூடியதாக இருக்க வேண்டும். இத்தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.