உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது

கோபி, பெருந்துறை அருகே செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் அரசு, 33; கூலித்தொழிலாளி. இவர் உறவினரின் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு, கவுந்தப்பாடி அருகே செரையாம்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு குளிக்க சென்றார். அந்த சமயத்தில் ஆற்றின் ஓரத்தில் சிறுநீர் கழித்து கொண்டிருந்த கோகுல் அரசிடம், இரு வாலிபர்கள், அது தங்கள் ஏரியா அங்கு சிறுநீர் கழிக்க கூடாது என மிரட்டியுள்ளனர். மேலும் கோகுல் அரசு கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க செயினை மிரட்டி வாங்கி கொண்டு, இருவரும் தப்பி ஓட முயன்றனர். இதையறிந்த கோகுல் அரசு சப்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் அந்த இருவரையும் மடக்கி பிடித்து கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் இருவரும், கவுந்தப்பாடியை சேர்ந்த, மணிகண்டன், 25, சசிக்குமார், 26, எனத்தெரியவந்தது. இதுகுறித்து கோகுல் அரசு கொடுத்த புகாரின்படி, அந்த இருவரையும் கவுந்தப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை