செல்லியாண்டி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவியேற்பு
பவானி: பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில், அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.சங்கமேஸ்வரர் கோவில் தக்கார் உதவி ஆணையாளர் அருள் குமார் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அறங்காவலர் குழுவிற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் தேர்ந்து எடுத்து அனுப்பினார். அதில் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கைலாசம் என்பவர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். போட்டியிட்ட மற்ற நான்கு பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.