உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை, திண்டல் மலையில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3- துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம் என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி

சென்னிமலை, திண்டல் மலையில் கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3- துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம் என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி

சென்னிமலை, திண்டல் மலையில்கோலாகலமாக தொடங்கிய சஷ்டி விழா சென்னிமலை, நவ. 3-'துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்' என்று, முருக பக்தர்களின் உயிர் நாடியாக, உச்சரிக்கும் மனதுக்கு தெம்பு, தைரியம், நிம்மதி தரும், பாலன் தேவராயன் சுவாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.இதையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகள், 1,320 படிக்கட்டு வழியாக மலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு யாக சாலையில் விநயாகர் வழிபாடு. யாக பூஜை, ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. அதை தொடர்ந்து, 108 வகை திரவிய அபிஷேகம் செய்து, உற்சவ மூர்த்திகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு பிறகு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்களுக்கு, தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் காப்பு கட்டிவிட்டார். ஆயிரக்கணக்கானோர் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். * ஈரோடு அருகேயுள்ள திண்டல் முருகன் கோவிலில், சஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கங்கணம் கட்டிக் கொண்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சண்முகார்ச்சனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை