உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எம்.பி., ராஜேஸ்குமாருக்கு முதல்வர் வாழ்த்து

எம்.பி., ராஜேஸ்குமாருக்கு முதல்வர் வாழ்த்து

ராசிபுரம், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்திற்கு, ஒரு மத்திய கூட்டுறவு வங்கி என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், தொடங்கி வைக்கப்படும் முதல் மத்திய கூட்டுறவு வங்கி என்ற பெருமையை, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கை துயரத்தை உயர்த்துவதற்கும், ஊக்குவிக்கவும் துணை நிற்கும். உழவர்கள் எல்லாம் மனம் மகிழும் நாள் இன்று. நாமக்கல் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியை ஆரம்பித்தே தீர வேண்டும் என்று ராஜேஸ்குமார் எம்.பி., என்னிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதை ஏற்று நானும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, உருவாகியுள்ள வங்கி மக்கள் சேவையில் மகத்தான பணியாற்ற உள்ளது. வங்கி அமைய காரணமாக இருந்த, வங்கியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஸ்குமாருக்கும், அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நபார்டு வாழ்த்துநபார்டு வங்கி சேர்மன் சாஜி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி.,க்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், தொலைநோக்கு திட்டத்தின் கீழ், தொடங்கி வைக்கப்படும் முதல் மத்திய கூட்டுறவு வங்கி என்ற பெருமை மட்டுமின்றி, சர்வதேச கூட்டுறவு ஆண்டான, 2025ல் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, விவசாய வளர்ச்சி, கிராமங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ