முதலமைச்சர் கோப்பை:விளையாட்டு நிறைவு
ஈரோடு:ஈரோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி கடந்த ஆக., 26ல் துவங்கி நேற்று வரை நடந்தது. பள்ளி, கல்லுாரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டத்தில், ஆன்லைனில், 19,320 பேர் முன்பதிவு செய்தனர். ஈரோடு வ.உ.சி., மைதானம் உட்பட பல்வேறு விளையாட்டு மைதானங்களில் நாள்தோறும் நடந்த நிலையில் நேற்றுடன் போட்டி நிறைவடைந்தது. மாற்றுத்திறனாளி பிரிவில் கபடி, செஸ், குண்டு எறிதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, கலெக்டர் கந்தசாமி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மற்ற பிரிவுகளில் வென்றவர்கலுக்கு மற்றொரு நாளில் பரிசளிப்பு விழா நடத்தப்பட உள்ளதாக மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தெரிவித்தார்.