மேலும் செய்திகள்
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
21 hour(s) ago
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகல-மாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் புனித அமல அன்னை ஆலயத்தில், நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து, குழந்தை இயேசு சிலை பவனியாக எடுத்து வரப்பட்டு, மாட்டுத் தொழுவம் வடிவில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்-டது. ஆலயத்தின் பங்குத்தந்தை ராயப்பன், உதவி பங்குத்தந்தை இன்பெண்ட் ராஜ் தலைமையில், கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்-பலி, கிறிஸ்து பிறப்புக்காட்சியை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.* அந்தியூர் சி.எஸ்.ஐ., சர்ச், நகலுார் புனித செபஸ்தியார் தேவா-லயம், புதுப்பாளையம், மாத்துார், வெள்ளித்திருப்பூர், சங்கராப்-பாளையம் உள்ளிட்ட அந்தியூர் சுற்று வட்டார சர்ச்சுகளில், கிறிஸ்-துமர் சிறப்பு பிரார்த்தனை வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.* பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள சி.எஸ்.ஐ., இமானுவேல் தேவாலயத்தில், அதிகாலை முதல் கிறிஸ்துமர் சிறப்பு பிராத்-தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெரியமேளாபாளையம், ஆப்பக்கூடல், கீழ்வாணி, அம்மாபேட்டை பகுதி சர்ச்சுகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.நிருபர் குழு
21 hour(s) ago