அரசு ஊழியர் தர்ணா; ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் தர்ணா; ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்ஈரோடு, அக். 9-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாலை நேர தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டரை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களை வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் உட்பட பலர் பேசினர்.