உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரும்பாலை கழிவு விவகாரம்; நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி

இரும்பாலை கழிவு விவகாரம்; நடவடிக்கைக்கு கலெக்டர் உறுதி

ஈரோடு; ஈரோட்டில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. இதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி பேசுகையில், ''ஆலை கழிவுகளை தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், வயல் வெளி, நீர் நிலைகளில் கொட்டி செல்கின்றனர். ஆட்டையாம்பாளையத்தில் இரும்பாலை கழிவை கொட்டி, 10 கி.மீ., துாரத்துக்கான மக்கள் தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் உள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூறுகையில், ''ஆட்டையாம்பாளையத்தில் கடந்த, 18ம் தேதி இரவில் இரும்பாலை கழிவை கொட்டினர். இரும்பாலை கழிவை கையாளும் நிபுணர்களை அழைத்து ஆய்வு செய்தோம். தடுப்பணை நீரை காலி செய்து, துார்வாரி, அடியில் படிந்த படிமத்தை அகற்ற கேட்டுள்ளனர். சித்தோடு போலீசில் கழிவை ஏற்றி வந்த லாரி, அதன் டிரைவர், உரிமையாளர், கழிவை வழங்கிய ஆலை மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்,'' என்றார்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில், ''கழிவை வழங்கிய ஆலையின் கடந்த கால, தற்போதைய செயல்பாடு பற்றி பெருந்துறை மாவட்ட செயற்பொறியாளர் அறிக்கை வழங்கியதும், மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அனுப்பி நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை