உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர்மலையில் கலெக்டர் ஆய்வு

பர்கூர்மலையில் கலெக்டர் ஆய்வு

அந்தியூர், அந்தியூரை அடுத்த பர்கூர்மலையில் பல்வேறு இடங்களில், 146 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நேற்று ஆய்வு மேற்கொண்டார். சோளகனையில், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் சாலை பணியை பார்வையிட்டு, சாலை நீளம், அகலம், தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், 49.74 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை பார்வையிட்டார். பர்கூர் அங்கன்வாடி, உறைவிட பள்ளிகளில் சத்துணவின் தரம், பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை விபரத்தை கேட்டறிந்தார். சோளகனையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், கான்கிரீட் சாலை அமைத்தல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பொது கிணறு அமைத்தல் உள்ளிட்ட, 146 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை