தாளவாடி, ஆசனுார் பகுதியில் கலெக்டர் ஆய்வு
ஈரோடு, சத்தியமங்கலம் தாலுகா தாளவாடி யூனியன், அரேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூதாளபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெத்தேசால் அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளி, ஆசனுார் பஞ்சாயத்து மேல்சீமை, ஓங்கல்வாடி பகுதிகளில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.அனைத்து பள்ளிகளிலும் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதா, மாணவர்கள் வருகை விபரம், ஆசிரியர் தேவை, அடிப்படை வசதிகளின் தேவைகளை கேட்டறிந்தார். பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடி, ஆங்கில வாசிப்பு திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.கெத்தேசால் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம், வாசிப்பு திறன், உணவு பொருட்கள் இருப்பு, கழிப்பறை, அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து, துாய்மையாக பராமரிக்க யோசனை தெரிவித்தார்.கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.பவானியில்