உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி கனவு நிகழ்ச்சி

கல்லுாரி கனவு நிகழ்ச்சி

ஈரோடு, 'நான் முதல்வன் திட்டத்தில்' பிளஸ் 2 முடித்த மற்றும் இடைநின்ற மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு வழிகாட்டும், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ.,சாந்தகுமார் தலைமை வகித்து பேசினார். இதில் ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 62 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பல்வேறு கல்லுாரிகள் சார்பில் அரங்குகள் அமைத்து, மாணவர்களுக்கு வழிகாட்டினர். மேயர் நாகரத்தினம், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பராணி, உயர் கல்வி வழிகாட்டி வல்லுனர்கள் அஸ்வின், அன்பரசு, ஆனந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ