உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவர் விஷத்தில் தற்கொலை

கல்லுாரி மாணவர் விஷத்தில் தற்கொலை

சத்தியமங்கலம்; திருப்பூர் மாவட்டம் வடுகம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோகரன் மகன் வெங்கடேஷ், 22; சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.டெக்., டெக்ஸ்டைல்ஸ் நான்காமாண்டு படித்து முடித்து, பெங்களூரில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஒன்றரை வருடங்களாக வேலை செய்து வந்தார். கம்பெனியில் தற்போது ஆட்குறைப்பு நடப்பதால் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமங்கலத்துக்கு கடந்த, 25ம் தேதி வந்தார். நண்பர் கவுதமுடன் கல்லுாரிக்கு காரில் சென்றுள்ளார். காரை நிறுத்தும்போது வெங்கடேஷ் மயங்கி விழுந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வேலை போய் விடும் என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது, சத்தி போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை