மேலும் செய்திகள்
அரசு பஸ்ஸில் இருந்து விழுந்தவர் படுகாயம்
24-Oct-2026
ஈரோடு:ஈரோடு வாய்க்கால்மேடு ஈ.பி. நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். பிரின்டிங் பட்டறை வைத்துள்ளார். இவர் மகள் சவுபர்ணிகா, 20, தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பது குறித்து, கடந்த ஒரு மாதமாக பெற்றோர் பேசி வந்தனர். தான் மேல் படிப்பு படிக்க வேண்டும் என சவுபர்ணிகா, பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த, 3ம் தேதி மதியம், தன் தோழி சுபாவிற்கு போன் செய்து, தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. வாழ பிடிக்கவில்லை என்று கூறி சவுபர்ணிகா, போன் இணைப்பை துண்டித்தார். இதுபற்றி சுபா, செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, படுக்கை அறையில் பேனில் சவுபர்ணிகா, துாக்கிட்ட நிலையில் இருந்தார். அவரை கீழே இறக்கி, ஆட்டோவில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Oct-2026