மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாய் புகார்
25-Apr-2026
சத்தியமங்கலம்,:கல்லுாரி செல்லும் மகள் காணவில்லை என்று, கடம்பூர் போலீசில் தந்தை புகார் கொடுத்துள்ளார்.கடம்பூரை அடுத்த குன்றி மலை பகுதி கோவிலுாரை சேர்ந்தவர் மார்ட்டின். திருப்பூரில் மனைவியுடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இதில், 17 வயதான நான்காவது மகள், கோபியில் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். தம்பதியர் கடந்த, 21ம் தேதி குன்றிக்கு வந்தனர். அப்போது நான்காவது மகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மார்ட்டின் புகாரின்படி கடம்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
25-Apr-2026