உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவன் விபரீத முடிவு

கல்லுாரி மாணவன் விபரீத முடிவு

கல்லுாரி மாணவன் விபரீத முடிவுபவானி, நவ. 22-அம்மாபேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை படகுத்துறை வீதியை சேர்ந்த நடராஜ் மகன் கிரி, 20; குமாரபாளையம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். சில நாட்களுக்கு முன், தாய் லோகேஸ்வரியிடம், பைக் வேண்டும் என கேட்டுள்ளார். கடன் இருப்பதால், பிறகு வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார். நேற்று முன்தினம் சாப்பிட புரோட்டா கேட்டுள்ளார். மாலை வாங்கி தருகிறேன் என்று கூறியதால், கோபித்து கொண்ட கிரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ