உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரிகளை செலுத்த கமிஷனர் அறிவுறுத்தல்

வரிகளை செலுத்த கமிஷனர் அறிவுறுத்தல்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை, உரிய காலத்திற்குள் செலுத்துமாறு கமிஷனர் அர்பித் ஜெயின் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2025-26ம் ஆண்டுக்கான அரையாண்டு வரும் செப்., 30 உடன் முடிவடைய உள்ள நிலையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி தொகையை செலுத்தி, காலதாமதத்திற்காக, 1 சதவீத அபராத கட்டண தொகையை தவிர்க்குமாறும், தொழில்வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு தொகை ஆகியவற்றை உரிய காலத்திற்குள் செலுத்திட வேண்டும். மேலும், சொத்து வரியை அக்.,1 முதல், 31ம் தேதிக்குள் செலுத்துவதால் வழங்கப்படும் 5 சதவீத ஊக்கத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி, வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ