உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்யூ., கட்சிகள் கூட்டம்

கம்யூ., கட்சிகள் கூட்டம்

காங்கேயம், இ,கம்யூ., மற்றும் மா.கம்யூ., காங்கேயம் கிளை செயலாளர் கூட்டம் நேற்று நடந்தது. கிளை செயலாளர் சேமலையப்பன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், காங்கேயம் தாலுகா செயலாளர் கணேசன், நத்தக்காடையூர் செயலாளர் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காங்கேயம் ஒன்றியத்தில், 350 கிராமங்கள், வெள்ளகோவிலில், 211 கிராமங்கள், காங்கேயம் நகராட்சி, முத்துார் பேரூராட்சி பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை