மேலும் செய்திகள்
தெரு நாய் கடித்து குதறி 2 ஆடுகள் பரிதாப பலி
25-Mar-2025
ஈரோடு:ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில், 2,000க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழிகள், தெருநாய் மற்றும் வெறிநாய்கள் கடித்து இறந்துள்ளன. அவ்வாறு இறந்த ஆடுகளுக்கு, 6,000 ரூபாய், கோழிகளுக்கு, 200 ரூபாய், மாடுகளுக்கு, 37,500 ரூபாய் இழப்பீடு வழங்க அரசு அறிவித்தது. இதற்கான கணக்கெடுப்பு நடத்தி, ஆவணங்களின் அடிப்படையில் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு, நேற்று முதல் இழப்பீடு வழங்கும் பணி துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 2024 செப்., 1 முதல் கடந்த ஜன.,25 வரை, 34 கால்நடை வளர்ப்போரின், 138 ஆடுகளுக்கு இழப்பீடாக தலா, 6,000 ரூபாய் வீதம், 8.28 லட்சம் ரூபாயை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். மற்ற ஆடு, மாடு, கோழிகளுக்கான இழப்பீடு படிப்படியாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
25-Mar-2025