பொய் வழக்கு பதிவு செய்ததாக பவானி போலீசார் மீது புகார்
பொய் வழக்கு பதிவு செய்ததாகபவானி போலீசார் மீது புகார்ஈரோடு, அக். 29-பவானி, மொண்டிபாளையத்தை சேர்ந்த காசிலிங்கம் மனைவி லட்சுமி, 55; குடும்பத்தினருடன் நேற்று வந்து, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் சத்தியசீலன் மொண்டிபாளையத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அப்போது பக்கத்து வீட்டின் கழிவுநீர் சாக்கடை சேதமானது. அதை, 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி கொடுத்தோம். ஆனால், பைப் லைன் போட்டு கட்டித்தருமாறு கேட்டதால் மீண்டும் புதிதாக அமைத்து கொடுத்தோம். இதை இடித்து அகற்றினர். தடுக்க முயன்ற என்னை தாக்கினர். இதுகுறித்து பவானி போலீசில் புகாரளிக்க, டி.எஸ்.பி., தலைமையில் செப்.,17ல் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், எதிர்தரப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதேசமயம் தங்கள் உறவுக்கார பெண்ணை தகாத வார்த்தை பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, பக்கத்து வீட்டுக்காரர் அளித்த பொய் புகாரில், எங்கள் மீது பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொய் வழக்கு குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.