உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அத்துகற்களை அகற்றி வீசியதாக ஓய்வு டி.எஸ்.பி., மீது புகார் கலெக்டர் ஆபீசில் குண்டுமூப்பனுார் மக்கள் குமுறல்

அத்துகற்களை அகற்றி வீசியதாக ஓய்வு டி.எஸ்.பி., மீது புகார் கலெக்டர் ஆபீசில் குண்டுமூப்பனுார் மக்கள் குமுறல்

ஈரோடு, ஜன. 4-அந்தியூர் தாலுகா குப்பாண்டம்பாளையம், குண்டுமூப்பனுாரை சேர்ந்த ராஜன் மற்றும் கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:குண்டு மூப்பனுார் பட்டியலின மக்கள் குடியிருப்பில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இக்குடியிருப்புக்கு நகலுார் பஞ்., நிர்வாகம் மூலம் கம்பம் போடப்பட்டு தெருவிளக்கு அமைக்கும் பணி செய்தனர்.கடந்த நவ.,5ல் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் வயலுக்குள் மின் கம்பங்கள் வருவதாக கூறி, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிவிட்டனர். இதைக்கேட்ட எங்களையும், பஞ்., நிர்வாகத்தினரையும் மிரட்டினர்.பிறகு பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்து அத்துக்கல் நடப்பட்டது. அதையும் அகற்றி மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அந்தியூர் போலீஸில் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.சாலையில் படுத்து போராட்டம்முன்னதாக கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, குண்டுமூப்பனுார் பகுதி மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர், முனியப்பன்பாளையத்தில் இருந்து நகலுார் செல்லும் சாலையில் நேற்று படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, எந்த உறுதியும் தரவில்லை. இதனால் மக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மனு கொடுத்தனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: குண்டுமூப்பனுாரில் சில நாட்களுக்கு முன், நகலுார் பஞ்., சார்பில் மின் கம்பம் போடப்பட்டது. கம்பம் அமைந்துள்ள இடம் தன்னுடையது என்று கூறி, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், கம்பத்தை பறித்து எறிந்து விட்டனர்.பிறகு இடத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய் துறையினருக்கு கோரிக்கை வைத்தார். அவர்களும் கடந்த மாதம், ௩௧ம் தேதி வந்து நிலத்தை அளவீடு செய்து, அத்துக்கல் நட்டனர். மறுநாளே அதையும் முத்துசாமி தரப்பினர் உடைத்து விட்டனர். இது மட்டுமின்றி எங்கள் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்களை தரக்குறைவாக பேசி தாக்கினர். இதுகுறித்து அந்தியூர் போலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பாக அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், இன்று (நேற்று) காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் சாலையில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தோம். இவ்வாறு கூறினர்.மக்கள் பொய் புகார்இதுகுறித்து ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி., முத்துசாமி கூறியதாவது: பட்டா இடத்தில் மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டனர். பின்னர் அவர்களே கம்பத்தை அகற்றி விட்டனர். கடந்த, 31ம் தேதி இரவு வருவாய் துறையினர், பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை அளக்க வந்தனர். அவர்களும் எங்கள் பட்டா இடத்தில் கற்களை நட்டு சென்று விட்டனர். அதை அகற்றியதற்கு, ஜாதி பெயரை சொல்லி நான் திட்டியதாக, போலீசில் பொய் புகார் தந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை