உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் கண்டக்டர் மீது புகார் மாற்றுத்திறனாளி இரவில் மறியல்

அரசு பஸ் கண்டக்டர் மீது புகார் மாற்றுத்திறனாளி இரவில் மறியல்

அரசு பஸ் கண்டக்டர் மீது புகார்மாற்றுத்திறனாளி இரவில் மறியல்பவானி, அக். 25-வெள்ளித்திருப்பூரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாரசாமி, 45; சோப்பு, சோப்பு பவுடர், ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறன் நலத்துறை சார்பில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, அவிநாசியில் இருந்து பவானி செல்ல, கோவை-சேலம் அரசு பஸ்ஸில் ஏறினார். அவிநாசியில் இருந்து பெருந்துறைக்கு மட்டும் பயணச்சீட்டு எடுத்துள்ளார்.அந்த பஸ் ஈரோடு மாவட்டம் வழியாக செல்லும் என்பதால், பெருந்துறையை பஸ் கடந்த பிறகு, பவானி அருகே லட்சுமி நகர் வரை பயணிக்க, கண்டக்டரிடம் பஸ் பாஸை காட்டியுள்ளார். பாஸை பார்த்த கண்டக்டர், இதில் இலவசமாக பயணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் லட்சுமிநகர் பஸ் நிறுத்தம் வந்தவுடன், மாரசாமி கூச்சலிட்டபடி இறங்கி, முன்பக்கம் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.கண்டக்டர் இழிவுபடுத்தி விட்டார். பஸ் பாஸை பறித்து கொண்டார் என்று கூறி, அரை மணி நேரத்துக்கும் மேலாக, பஸ்ஸை இயக்க விடவில்லை. சித்தோடு போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால் சமாதானம் ஆகினார். மாரசாமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், அவருக்கு உணவு வாங்கி கொடுத்த வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை