உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடையை ஆக்கிரமித்து வீடுகள் மழை நீர் வருவதாக புகார்

ஓடையை ஆக்கிரமித்து வீடுகள் மழை நீர் வருவதாக புகார்

ஈரோடு, பெருந்துறை தாலுகா கராண்டிபாளையம் பஞ்.,ல் நத்தம் பகுதியில், ஓடைக்கு அருகே, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியினர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:கராண்டிபாளையத்தில் எங்கள் குடியிருப்புக்கு அருகே நீர் நிலை ஓடை உள்ளது. இதை ஆக்கிரமித்து சில நபர்கள் வீடு, பிற கட்டுமானங்களை செய்துள்ளனர். தொடர்ந்து கட்டுமானங்கள் வருவதால், பலத்த மழை காலத்தில் ஓடை வழியாக குளத்துக்கு செல்லும் நீர் தடைபட்டு, தாழ்வாக உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. வருவாய் துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஓடை நீரை நேரடியாக குளத்துக்கு செல்லும் வகையிலும், குடியிருப்புக்குள் வராமலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை