உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியார் பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்-டிரைவர்

தனியார் பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்-டிரைவர்

தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 34; தனியார் பஸ் கண்டக்டர். ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் பஸ்ஸில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். முள்ளிப்புரம் அருகே பயணி ஒருவர் இறங்கினார். பஸ் சிறிது துாரம் சென்ற நிலையில் பார்த்தபோது, அவர் அமர்ந்திருந்த சீட்டில் பை கிடந்தது. கண்டக்டர் மகேந்திரன் எடுத்து பார்த்தபோது, ஒரு லட்சம் ரூபாய் இருந்தது.பழனி சென்று பயணிகளை இறக்கி விட்டபின், திரும்பி வரும் வழியில் மாலை, 4:00 மணிக்கு, தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், டிரைவர் ராஜாவுடன் சென்று, பணப்பையை ஒப்படைத்தார். பையில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்ததில், பணப்பையை விட்டுச் சென்றவ ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த சண்முகம், 65, என்பது தெரிய வந்தது. அவரை வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர்.அதேசமயம் டிரைவர், கண்டக்டருக்கு, தாராபுரம் போலீசார் பாராட்டு தெரிவித்து, சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை