உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் 7ல் பொதுகூட்டம் காங்., கட்சியினர் ஆலோசனை

அந்தியூரில் 7ல் பொதுகூட்டம் காங்., கட்சியினர் ஆலோசனை

அந்தியூர், அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில், பிரம்மதேசம் சாலையில் தனியார் மண்டபத்தில், காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட பொது செயலாளர் பாசம் மூர்த்தி, வட்டார தலைவர் பழனிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகில் வரும், 7ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். கூட்டத்துக்கு வரும் தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்., தலைவர் ராஜேஸ்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் வட்டார முன்னாள் தலைவர் நாகராஜா, கவுன்சிலர் பழனிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை