உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராகுல் குறித்து அவதுாறுகாங்., கட்சியினர் மனு

ராகுல் குறித்து அவதுாறுகாங்., கட்சியினர் மனு

ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கட்சி திருச்செல்வம் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, விஜய பாஸ்கர், பாஷா உள்ளிட்ட கட்சியினர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் குறித்து, ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, உ.பி., மாநில தலைவரும், அம்மாநில அமைச்சருமான ரகுராஜ் சிங், மகாராஷ்டிரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சஞ்சய் கெய்க்வாட், தமிழக பா.ஜ., பொறுப்பு தலைவருமான ராஜா, பா.ஜ., தலைவர் தர்விந்தர் சிங் மர்வா ஆகியோர், ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பேசும்போது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி, ராகுல் குறித்து அவதுாறு பரப்பி விமர்சனம் செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ