மேலும் செய்திகள்
கொடியேற்றுதல்
01-Dec-2024
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்ஈரோடு, டிச. 10-மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ., அரசை கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மதரீதியாக செயல்பட்டு, கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், இக்கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.* ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில், அகில இந்திய காங்., முன்னாள் தலைவர் சோனியா பிறந்த நாள் விழா, கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் உடல் நலம் பெற வேண்டி, சர்வமத பிரார்த்தனை நடந்தது. இதில் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
01-Dec-2024