தேர்தல் கமிஷனை கண்டித்து காங்., பேரணி
ஈரோடு, ஈரோடு மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட காங்., சார்பில், வாக்காளர் மற்றும் ஓட்டு திருட்டு நடந்ததாக கூறி, தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று பேரணியாக சென்றனர். அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் தொடங்கி, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் நிறைவு செய்தனர். இதில் மாவட்ட தலைவர்கள் மக்கள்ராஜன், சரவணன், திருச்செல்வம் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, நிர்வாகிகள் ராஜேஷ் ராஜப்பா, விஜயபாஸ்கர், தீபா, பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.