உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவு

அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவு

அரங்கநாதர் கோவிலில்பிரமோற்சவ விழா நிறைவுஈரோடு, அக். 16-ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 12ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதன் பிறகு சேஷ வாகனம், தெற்போற்சவ நிகழ்ச்சி நடந்தது.நிறைவு நாளான நேற்று காலை யாகசாலை பூஜை, கோபாலகிருஷ்ணர் பிரகார வலம் வருதல், திருவிழா கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு நடந்தது. இரவில் வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ