உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.பி.எஸ்., வருகை குறித்து தாராபுரத்தில் ஆலோசனை

இ.பி.எஸ்., வருகை குறித்து தாராபுரத்தில் ஆலோசனை

தாராபுரம் அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., தாராபுரத்துக்கு வரவுள்ளார். இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். வரும், ௧௧ம் தேதி தாராபுரத்துக்கு வரும் இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக, கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் சுகுமார், கருப்பு சாமி மற்றும் கொளத்துப்பாளையம் அ.தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி