உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர் எடுத்து செல்லும் திட்டம் 24ல் கருத்து கேட்பு கூட்டம்

நீர் எடுத்து செல்லும் திட்டம் 24ல் கருத்து கேட்பு கூட்டம்

ஈரோடு, பவானிசாகர் அணை அருகே புதுபீர் கடவு உட்பட எட்டு கிராமங்களுக்கு நீரேற்ற திட்டம் மூலம், குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நீர் வளத்துறை சார்பில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் பாசன ஆயக்கட்டு அமைப்புகளுக்கு, நீர்வளத்துறை கடிதம் அனுப்பி, தங்கள் கருத்தை தெரிவிக்க கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பதற்கு, வரும், 24ம் தேதி காலை, 10:30 மணிக்கு ஈரோடு, ஏ.இ.டி., பள்ளி வளாக விடுதியில் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து ஆயக்கட்டு பயனாளிகள், அமைப்புகள் பங்கேற்க, பவானி நதி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சுப்பு வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை