உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

ஈரோடு, ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் மலை கிராமங்களில் மண் சாலை அமைப்பது, அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த கழிவுநீக்கம் செய்யப்பட்ட விபரம், அம்ருத் 2.0 திட்டத்தில் நெடுஞ்சாலைகளில் குடிநீர் குழாய் பதிப்பது, பவானி ஆற்றின் குறுக்கே பழைய இரும்பு பாலத்துக்கு பதில் புதிய உயர்மட்ட பாலம் அமைப்பது உட்பட பல்வேறு பணிகளை விரைவுபடுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆர்.டி.ஓ., சிந்துஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ