உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொ.ம.தே.க., சார்பில் ஆலோசனை கூட்டம்

கொ.ம.தே.க., சார்பில் ஆலோசனை கூட்டம்

சென்னிமலை: சென்னிமலையில் நடந்த கொ.ம.தே.க., ஆலோசனைக் கூட்டத்தில், ஏழை விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, சென்னிமலை தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய கொள்கை பரப்பு செய-லாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் செங்கத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய தொண்டரணி செயலாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் யுவராசன், ஒன்றிய துணைச் செயலாளர் முத்-துக்குமாரசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சென்னிமலை ஒன்றியத்தில், 482 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகள் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்து நீண்ட காலமாக காத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை