உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி பார்க்கிங் விவகாரத்தில் சர்ச்சை

மாநகராட்சி பார்க்கிங் விவகாரத்தில் சர்ச்சை

திருப்பூர், அக். 27-திருப்பூரில் குமரன் ரோடு, டவுன் ஹால் வளாகம் அருகே, பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கட்டப்பட்டுள்ளது. டெண்டர் முடியாமல் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.தற்போது தீபாவளி பண்டிகை நெரிசலால், மாநகராட்சி நிர்வாகம், இந்த வளாகத்தை தற்காலிகமாக பயன்பாட்டுக்கு திறக்க முடிவு செய்தது. இருசக்கர வாகனங்களுக்கு 3 மணி நேரத்துக்கு 25 ரூபாய்; அதற்கு மேல் ஒரு மணி நேரத்துக்கு தலா 10 ரூபாய் கட்டணமும், கார்களுக்கு 3 மணி நேரத்துக்கு, 100 ரூபாய் அதற்கு மேல் ஒரு மணி நேரத்துக்கு, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டி முடித்து திறந்து பல மாதமாகிய நிலையில் தற்போது தீபாவளியை கருதி திறப்பது என்பது உள்நோக்கம் கொண்டது. மாநகராட்சி நிர்வாகம் இந்த கட்டண விகிதத்தை திரும்ப பெற வேண்டும். தீபாவளி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை