உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு துறை தேர்வு:404 பேர் ஆப்சென்ட்

கூட்டுறவு துறை தேர்வு:404 பேர் ஆப்சென்ட்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி மற்றும் வேளாளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. மொத்தம், 1,901 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,497 பேர் தேர்வை எழுதினர். 404 பேர் வரவில்லை. தேர்வை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் குமார் உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி