உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு சங்க பணியாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மாவட்ட செயலர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் மேசப்பன் தலைமையில் நேற்று, 3வது நாளாக வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பணியாளர் பெற்று வந்த சம்பளத்தில், 20 சதவீதம் ஊதிய உயர்வு எவ்வித நிபந்தனையின்றி வழங்க வேண்டும். சங்கங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் விவசாய உபகரணங்கள், வாகனங்கள், தேவையற்ற கட்டடங்கள் உள்ளிட்ட திட்டங்களின் காரணமாக ஏற்படும் இழப்புகள் அரசால் ஈடு செய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட தலைவர் மேசப்பன் கூறுகையில், ''முதல் நாளில் ஆர்ப்பாட்டமும், கடந்த, 2 நாட்களாக வேலை நிறுத்தத்துடன் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபடுகிறோம். மாவட்ட அளவில், 800க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் உள்ளோம். அரசு தரப்பில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. வரும் வெள்ளி அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. உடன்பாடு எட்டும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை