உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு வாரவிழா

கூட்டுறவு வாரவிழா

ஈரோடு, நவ. 15-அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா, ஈரோடு மாவட்டத்தில் நேற்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக வளாகத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 'அரசின் புதிய செயல்திறன்மிகு திட்டங்கள் மூலம் கூட்டுறவை வலுப்படுத்துதல்,' என்ற தலைப்பில் நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, கூட்டுறவு கொடியேற்றி, உறுதிமொழி ஏற்றனர். பின், 100 சதவீத கடன் வசூலித்த சங்கங்கள், அதிக இட்டு வைப்புகளை திரட்டிய சங்கங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி