உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிபில் ஸ்கோர் பார்க்க கூடாது கொ.ம.தே.க., கொதிப்பு

சிபில் ஸ்கோர் பார்க்க கூடாது கொ.ம.தே.க., கொதிப்பு

அந்தியூர், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்களுக்கு, சிபில் ஸ்கோர் கேட்பதை ரத்து செய்து, பழயை முறையில் கடன் வழங்க வேண்டும். கால்நடை பராமரிப்பு கடன் வழங்க முக்கூட்டு ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். விவசாய பூமி ஒரு இடத்திலும், குடியிருப்பு மற்றொரு இடத்திலும் உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், அந்தியூர் மத்திய கூட்டுறவு வங்கி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை ராஜா தலைமையில், ௪௦க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி