உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீடியோ கான்பரன்ஸில்தினசரி அங்காடி திறப்பு

வீடியோ கான்பரன்ஸில்தினசரி அங்காடி திறப்பு

கோபி, டிச. 21-கோபி, பெரியார் திடல் எதிரே, 6.99 கோடி ரூபாயில், தினசரி அங்காடி கடை கட்டுமான பணி, 2021ல் அக்., மாதத்தில் துவங்கியது. பார்க்கிங் வசதி, முதல் தளத்தில் உள் மற்றும் வெளிப்பகுதி என நுாறு கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் தினசரி அங்காடி கட்டட வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸில் நேற்று காலை திறந்து வைத்தார். அங்காடியில் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், காய்கறி வியாபாரிகள் என பங்கேற்றனர்.இதேபோல் பண்ணாரியம்மன் கோவிலில், அன்னதானகூடம், கருணை இல்லம் மேம்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி