உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேதமடைந்த மின்கம்பம் அகற்றம்

சேதமடைந்த மின்கம்பம் அகற்றம்

கோபி: கோபி, பெரியார் திடல் பஸ் ஸ்டாப் அருகே இருந்த சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.கோபி, பெரியார் திடல் பஸ் ஸ்டாப் நடுவே, பிரதான சத்தி சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு இடைப்பட்ட பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதியது. இதனால் மின்கம்பம் சேதமடைந்ததுடன், அதன் ஒயர்கள் வெளியே தொங்கியதால், பாதசாரிகளுக்கு ஆபத்து காத்திருந்தது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், அந்த மின் ஒயரை முறையாக அகற்ற, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சேதமடைந்த மின்கம்பத்தை பணியாளர்கள் அகற்றியதால், அப்பகுதி பாதசாரிகள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை