மேலும் செய்திகள்
பாசனக் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
02-Oct-2025
கோபி, கோபி அருகே மேட்டுவலவு பஸ் நிறுத்த பிரிவு வழியே, கபிலர் வீதி செல்லும் வழியில், கீரிப்பள்ளம் ஓடை உள்ளது. இதன் தடுப்புச்சுவர் சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. நாளுக்கு நாள் சேதம் அதிகரித்தபடியே உள்ளது. தற்போது மழைக்காலமாக இருப்பதால், சேதமடைந்த தடுப்புச்சுவர் கட்டமைப்பை வழியே, ஓடைக்குள் எவரேனும் தவறி விழும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட கோபி நகராட்சி நிர்வாகம், தடுப்புச்சுவர் கட்டமைப்பை பலப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
02-Oct-2025